அமெரிக்காவில் காணாமல் போன இந்தியா வம்சாவளியினர் 4 பேர் சடலமாக மீட்பு

United States of America
By Thahir 1 மாதம் முன்

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கொலை?

அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கலிபோர்னியாவில் உள்ள மெர்சிட் கவுண்டியில் உள்ள வணிக நிறுவனத்தில் இருந்து இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த,

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியா வம்சாவளியினர் 4 பேர் சடலமாக மீட்பு | 4 Bodies Of Missing Indians Recovered America

ஜஸ்தீப் சிங் (36), ஜஸ்லீன் கவுர் (27), இவர்களின் எட்டுமாத குழந்தை அரூஹி தேரி மற்றும் குழந்தையின் மாமா அமந்தீப் சிங் (39) ஆகியோரை ஜீசஸ் மானுவல் சல்காடோ என்பவர் டிரக் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை உட்பட 4 பேரும் அமெரிக்காவில் உள்ள ஹட்சின்சன் சாலைக்கு அருகிலுள்ள பழத்தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியா வம்சாவளியினர் 4 பேர் சடலமாக மீட்பு | 4 Bodies Of Missing Indians Recovered America

இதனிடையே கடத்தலில் ஈடுபட்ட ஜீசஸ் மானுவல் சல்காடோ என்பவரை போலீசார் பிடிக்க முயன்ற போது தற்கொலை முயன்றதால் அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.