ஒரே இரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம் மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடிரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.20 ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
இதேபோல போளூர் ரெயில் நிலையம் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்மை உடைத்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பியுள்ளனர்.
அதைபோல கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்ததால்,4 ஏடிஎம் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
ஒரே இரவில் 75 லட்சம் கொள்ளை
ஒரே இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களின் இயந்திரத்தை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை போனதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்கள் சேரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.