துப்பு துலக்கிய போலீஸ் - ராஷ்மிகா Deepfake வீடியோ 4 பேர் சிக்கிய பின்னணி..?

Rashmika Mandanna Crime Deepfake Video
By Karthick Dec 20, 2023 09:36 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா Deep fake வீடியோ வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் டெல்லி போலிஸ் விசாரணை நடத்திவருகிறது.

DeepFake வீடியோ

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா போன்று சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரல் அடைந்தது. இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

4-arrested-in-rashmika-deep-fake-video-by-delhicop

மேலும் DeepFake வீடியோவால் ராஷ்மிகா வருத்தம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

சிக்கிய பின்னணி என்ன..?

இந்த விவகாரம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலிசார் தீவிர விசாரணை நடத்தியது. மேலும், வீடியோ வெளியான குறிப்பிட்ட ID'யை meta நிறுவனத்திடம் சமர்ப்பித்து சம்மந்தப்பட்டவர்களை சுற்றிவளைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4-arrested-in-rashmika-deep-fake-video-by-delhicop

இந்த வழக்கின் நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையமானது டெல்லி போலீசாரிடம் அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலிஸ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.