பிரபல நகைக்கடையில் கொள்ளை போன 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார்

Chennai Tamil Nadu Police
By Thahir Mar 14, 2023 07:20 AM GMT
Report

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடமிருந்து 4.5 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நகைக்கடையை உடைத்து கொள்ளை 

கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் ஜே.எல் நகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை இரவு வழக்கம் போல கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் நகைகளை திருடி சென்றனர்.

நள்ளிரவில் கொள்ளையர்கள் வெல்டிங் மிஷினை கொண்டு கடையின் கதவை துறையிட்டு உள்ளே சென்று அங்கு நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தையும் வெல்டிங் மிஷினால் அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றதாக கூறப்பட்டது.

4-5-kg-of-jewelery-seized-from-the-robbers

இதனையடுத்து சென்னை பெரம்பூர் ஜே.எல் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கொள்ளையர்களிடம் இருந்து நகைகள் மீட்பு 

இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கொள்ளையில் ஈடுபட்ட கங்காதரன்,ஸ்டீபரன் ஆகிய இருவரை பெங்களூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து போலீசார் 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளை நீதிமன்றத்தில் உரிமை கோரி போலீசார் பெற்று சென்றனர்.

நகைகளை உருக்கிய கொள்ளையர்களை 2 கிலோ நகையை உருக்கவில்லை என்றும் உருக்கப்பட்ட 3.5 கிலோ நகைகள், உருக்கப்படாத ஒரு கிலோ என இதுவரை 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அருண் கௌதம் என்பவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.