நேபாளத்தில் நிலநடுக்கம்... - அலறி ஓடிய மக்கள்...!

Earthquake Nepal
By Nandhini Feb 22, 2023 09:54 AM GMT
Report

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று பிற்பகல் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி-என்சிஆர் பகுதியிலும் லேசான நில நடுக்க அதிர்வு மக்களால் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜும்லாவிலிருந்து 69 கிமீ தொலைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிமீ ஆழத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக ஜனவரி 24ம் தேதி நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.