கள்ளக்காதலுடன் உல்லாசம்..3 வயது சிறுவன் சுவற்றில் அடித்துக்கொலை - பகீர் பின்னணி!
3 வயது சிறுவன் சுவற்றில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 வயது சிறுவன்
சேலம் மாவட்டம் குகை பகுதியில் வசித்து வருபவர்கள் பசுபதி -சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு வெற்றிவேல் (6), மாறன் (3) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் ஷண்முகப்பிரியாவுக்கு கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையிலிருந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த பசுபதி மனைவி ஷண்முகப்பிரியாவைக் கண்டித்துள்ளார். இதனால் மனைவி சண்முகப்பிரியா குழந்தைகளுடன் தமிழரசன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த சூழலில் மகன் மாறன் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சுயநினைவின்றி மாறன் இருந்ததால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அடித்துக்கொலை
இது குறித்து கள்ளக்காதலன் தமிழரசனை காவல்துறையினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், சிறுவன் மாறன் இரவு நேரத்தில் அடிக்கடி அழுது வந்துள்ளான். இதனால் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் சிறுவனை சுவற்றில் தூக்கி அடித்ததில் மயங்கி கீழே விழுந்தது தெரியவந்தது.இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.