மீண்டும் ஊரடங்கு? - முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை! எப்போ இருந்து தெரியுமா?
மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது.
அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள். நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம். கட்டுப்படுத்தியுள்ளோமோ தவிர முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
முழு ஊரடங்கின்போது கொரோனா கட்டுக்குள் இருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் லேசாக பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதை கவனம் வைத்து மக்கள் செயல்படவேண்டும். மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதில்லை.
முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். அலட்சியமாக கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் திறன் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகையால் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்” எனக் கூறியுள்ளார்.
#COVID19 அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்; #ThirdWave தடுப்போம் #MASKUpTN pic.twitter.com/4iNtdirZ8o