கொரோனா 3 ஆம் அலை நிச்சயம்: இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை
கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை உருவாவதை தடுக்க முடியாது என இந்திய மருத்துவக் கழகம் எச்சரித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா 2வது அலை தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகிறது.
இதனால் மக்கள் சுற்றுலா, புனித யாத்திரை என பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதாகவும், அதைத் தவிர்த்திடுமாறும் இந்திய மருத்துவக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மக்கள் கூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் கொரோனா 3வது அலை உருவாவதை தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.