3வது டெஸ்டில் கழட்டி விடப்படும் இந்திய அணி வீரர் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இதனிடையே 3 வது போட்டி ஜனவரி 11 ஆம் தேதி நடக்க உள்ளது. 

இப்போட்டியில் 2வது டெஸ்டில் விளையாடிய எந்த வீரர் கழற்றிவிடப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தாலும், பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காததால் இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவியது. 

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், 4 வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் அணியை தேர்வு செய்கிறது. இதில் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் கூடுதலாக பின்வரிசையில் ரன் அடிப்பார்கள் என்ற முறையில் அணி தேர்வு நடைபெறுகிறது.

ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் , பேட்டிங்கை வலுப்படுத்துவதே சரியான அணி தேர்வாக இருக்கும். ஆனால், நேற்றைய போட்டியின் போது பேசிய கே.எல்.ராகுல், கடைசி டெஸ்டிலும் இந்திய அணி இதே கட்டமைப்புடன் தான் விளையாடும் என்று தெரிவித்தார். இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பினால் ஒரு பேட்ஸ்மேனை தான் கழற்றிவிடுவார்கள் என்று உறுதியாகியுள்ளது 

இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் 2வது டெஸ்டில் அரைசதம் விளாசி நல்ல உத்வேகத்துடன் இருப்பதாக கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதில் இருந்து கடைசி டெஸ்டில் இந்த சீனியர்கள் தான் இடம்பெறுவார்கள் என்று உறுதியாகியுள்ளது. இதனால், 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் விஹாரியை தான் இந்திய அணி கழற்றிவிடும் என்று கூறப்படுகிறது. விஹாரிக்கு எப்போவாது தான் வாய்ப்பு கொடுக்கிறீர்கள். அதிலும் அவர் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்த டெஸ்டில் வாய்ப்பு கொடுக்க மறுப்பது ஏன்? என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்