பறந்தது ஸ்டெம்ப் , கேப்டவுனில் பழிதீர்த்த பும்ரா - வைரலாகும் வீடியோ

indvssa 3rdtest bumrahrevenge
By Irumporai Jan 13, 2022 06:33 AM GMT
Report

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மட்டும் 79 ரன்கள் அடித்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்க முதலே வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது.

பும்ராவின் வேகத்தில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்காரணமாக இந்திய அணிக்கு 13 ரன்கள் முன்னிலையையும் அளித்தது. அசத்தலாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.  

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸின் போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தென்னாப்பிரிக்கா வீரர் மார்கோ ஜன்சனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அவரை க்ளின் போல்ட் ஆக்கி அசத்தினார். இதன்மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் இவர்கள் இருவருக்கும் நடுவே களத்தில் ஏற்பட்ட சண்டைக்கு இந்தப் போட்டியில் களத்தில் பழி தீர்த்து கொண்டார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது பும்ரா பேட்டிங் செய்து கொண்டிருதார். அப்போது பந்துவீசிய ஜன்சன் பவுன்சர் பந்துகளாக தொடர்ந்து வீசினார். அத்துடன் அப்போது பும்ராவிடம் சில வாக்குவாதங்களில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்திற்கு தற்போது பும்ரா தன்னுடைய பந்துவீச்சின் மூலம் பழி வாங்கியுள்ளார் என்று பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஆட்டமிழந்துள்ளனர்.