ஆஸி. சுழற்பந்து வீச்சால் திணறிய இந்திய அணி.... - அடுத்தடுத்து விக்கெட் இழந்து அதிர்ச்சி...!
ஆஸ்திரேலியாவின் அபார சுழற்பந்து வீச்சால் மண் சரிவு போல் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்தது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட்டானார்கள். இதன் பிறகு வந்த புஜாரா 1 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்கள்.
இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, பரத்தும் நிதானமாக ஆடினார். இதன் பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து விராட் கோலி, ஸ்ரீகர் பரத் பெவிலியன் திரும்பினர்.
#IndvsAus | 3rd Test in Indore, Day-1 | India 84/7 at lunch against Australia
— ANI (@ANI) March 1, 2023
(Pic source: ICC) https://t.co/DNwETz7LoB pic.twitter.com/Kz6RMUa43n
Rohit played a couple of delightful strokes before he lost his patience against a wily Kuhnemann#IndvsAus #RohitSharma #MatthewKuhnemannpic.twitter.com/MKXmsH4N4P
— OneCricket (@OneCricketApp) March 1, 2023
Team India dropped KL Rahul in the 3rd Test after a series of poor performances ?#CricketTwitter #india #australia #indvsaus pic.twitter.com/IW2MlXGyjm
— Sportskeeda (@Sportskeeda) March 1, 2023
Unreal turn on the first day of a Test match. Indore, what have you done?#IndvsAus #BGT2023 #CricketTwitterpic.twitter.com/jMwPXgnpBZ
— Himanshu Pareek (@Sports_Himanshu) March 1, 2023