இங்கிலாந்து அணியை அசால்டாக துவம்சம் செய்யும் ஹிட்மேன் ரோஹித் சர்மா - சதம் அடித்து அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் என்ற நிலையில் இந்தியா 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
நிதானமாக விளையாடிய ராகுல் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மா, புஜாரா ஜோடி சராசரியான வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேர்த்தியாக விளையாடிய ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இது இந்தியாவிற்கு வெளியே ரோகித் அடித்த முதல் சதமாகும். 127 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய புஜாரா, 61 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 22 ரன்களுடனும், ஆல் ரவுண்டர் ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.