3வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் சுருண்டு விழுந்த இந்தியா - 109 ரன்னில் All Out..!
3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா சுருண்டு விழுந்துள்ளது.
முதல் இன்னிங்சில் சுருண்டு விழுந்த இந்தியா - All Out
வெற்றி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய இந்திய பேட்ஸ்மென்கள் ரோகித் சர்மா, சுக்மன் கில், புஜாரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர்.
இதன் பிறகு களத்தில் இறங்கிய விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் 22 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்களிலும், உமேஷ் யாதவ் 17 ரன்களிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்து ஆல் ஆவுட்டானது.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னும் சற்று நேரத்தில் தனது முதல் இன்னிங்சை தொடங்க இருக்கிறது.
India are 109 all out! ?
— Cricket Infer (@CricketInfer) March 1, 2023
Matthew Kuhnemann has taken a five-fer on the first day of his Test debut. ? pic.twitter.com/cknV9ROxQV
A huge bowling effort from Australia means that India all out for 109!#INDvAUS
— cricket.com.au (@cricketcomau) March 1, 2023
First Test five-for. ✅
— SEN Cricket (@SEN_Cricket) March 1, 2023
Kuhnemann finishes with 5/16.
India all out for 109. ?#INDvAUS pic.twitter.com/radcGRV9Jn