செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
TN Weather
By Thahir
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஆயிரம் அடி கன நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் மாலை 4.30 அளவில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6000 அடி கன உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 1500 கன அடி உபரி நீர் என மொத்தம் 7500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.