39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

ipsofficer transferred
By Irumporai Jun 14, 2021 11:43 AM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்று ஒரே நாளில் 39ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் இறையன்பு வெளியிட்டுள்ளார் அதில் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

. திருவாரூர் ஆட்சியர் சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் ஆட்சியராக இருந்த மேகராஜ் நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.