இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை - மறக்க முடியுமா?
இந்தியா முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டு இன்றோடு 38 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
1983 ஆம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன.
இதில் இரட்டை ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என கனவில் மிதந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை இந்திய அணியின் பவுலர்கள் காலி செய்தனர்.
இறுதியாக அந்த அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் முதலாக உலக் கோப்பையை கையில் ஏந்தினார் கபில்தேவ் .
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil