38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற இரக்கமற்றவர்கள் - கர்நாகாவில் பரபரப்பு
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சௌதான்ஹள்ளி கிராமத்தில் குரங்குகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரத்தில் சாக்கு பைகள் இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த அப்பகுதி மக்கள் அதனை திறந்து பார்த்தபோது உள்ளே குரங்குகள் உயிரிழந்த நிலையிலும், இருந்ததை சில உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஹாசன் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 50க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாகவும், இதில் 38 குரங்குகள் உயிரிழந்த நிலையில் 20 குரங்குகள் காயத்துடன் போராடி வருகின்றனர் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மூத்த வன அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் இறந்த குரங்குகளை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.