சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் டெல்லி வருகை

Sudan
By Irumporai Apr 27, 2023 02:41 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சவூதி அரேபிய அரசுடன் இணைந்து ஆப்ரேசன் காவேரி எனும் திட்டம் மூலம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார் .

 சூடான் போர்

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் நடக்கும் உள்நாட்டு போர் உலகையே பதற்றமடைய வைத்துள்ள்ளது. இதுவரை இந்த துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 5000க்கும் அதிகமானோர் படுகாயமுற்றுள்ள்ளனர்.

 இந்தியர்கள் தவிப்பு

உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கு உணவு, இருப்பிடம் , மருத்துவ சேவைகள் என அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் அங்கு சிக்கி தவித்து வரும் இந்திய மக்களை மீட்க இந்திய அரசு , சவூதி அரேபிய அரசுடன் இணைந்து ஆப்ரேசன் காவேரி எனும் திட்டம் மூலம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார் .

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் டெல்லி வருகை | 360 Indians Stranded In Civil War Sudan Arrived

இந்தியர்கள் வருகை 

இதில், நேற்று முதற்கட்டமாக 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இதில் 9 தமிழர்களும் அடங்குவர். இந்த 9 தமிழர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது . முன்னதாக சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.