35 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் .. தற்போது 37வது திருமணம் ..வைரலாகும் வீடியோ

நாகலாந்தில் 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் உள்ள முதியவர் ஒருவர் தற்போது 37வது திருமணம் செய்துள்ள  வீடியோ வைரலாகியுள்ளது.

பழங்காலத்தில் ராஜாக்கள் கதையில் நாம் படித்திருப்போம் அந்த ராஜாவுக்கு பல மனைவிகள் உண்டு என்று. அந்த நிகழ்வுகள் பழங்காலத்தில் வேண்டுமானல் சாத்தியமாக இருக்கலாம்.

ஆனால், தற்போதுதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது பலருக்கும் பெரும் சா{சோ}தனையாக உள்ளது.

இந்த நிலையில் 36 மனைவிகளை திருமணம் செய்து தற்போது 37வது திருமணத்தையும் செய்துள்ளார்  முதியவர் ஒருவர்நம்ப முடிகிறதா?ஆம் உண்மைதான் .

இன்னும் உள்ள விவரங்களை கேட்டால் உங்களுக்கு மயக்கமே வரலாம். அந்த நாகலாந் முதியவருக்கு 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது முன்னிலையில் தான் தற்போது 37வது திருமணமாக இளம்பெண் மணந்துள்ளார்.

அந்த முதியவரின் 37 வது கல்யாண வீடியோதான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது

அதில்,  இணைய வாசிகள் தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்' என கூறிவருகின்றனர். 

 இது வாழ்த்தா ? அல்லது வசவா?  என தெரியவில்லை. எது எப்படியோ இன்னமும் அந்த முதியவர் புது மாப்பிள்ளையாக  உள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்