திருவாரூரில் அதிர்ச்சி.. 10 ஆம் வகுப்பு மாணவனுடன் 35 வயது பெண் தலைமறைவு
திருவாரூரில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் 35 வயது பெண் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே வசித்து வரும் பாலகுரு - ராசாத்தி தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். இதில் 15 வயது சிறுவன் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் வசிக்கும் அதே தெருவில் 35 வயதுடைய பெண், கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். அந்த பெண் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணியில் உள்ளார்.
இந்நிலையில் 35 வயதுடைய பெண்ணுக்கும், 15 வயது சிறுவனுக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் தனது மகனை கண்டித்துள்ளனர். மேலும் சிறுவனை எரவாஞ்சேரி அக்ரஹார பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கவைத்து பள்ளிக்கு சென்று வரும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவன் தனது சித்தி வீட்டில். இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்ற சிறுவன் வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் அவனை காணவில்லை. இதுகுறித்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் என அவனது தந்தை பாலகுரு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுவன் மற்றும் 35 வயதுடைய பெண்ணை பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.
போலீசாரின் தொடர் விசாரணையில் ஆட்டோ டிரைவர் அவர்கள் இருவரையும் பூந்தோட்டம் என்ற ஊரில் இறக்கி விட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து எரவாஞ்சேரி காவல்துறையினர் சிறுவனை கடத்தியதாக 35 வயதுடைய பெண் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் அந்த பெண்ணின் செல்போன் சிக்னல் கொண்டு தொடர்ந்து தேடி வருகின்றனர்.