Monday, Apr 14, 2025

அடேங்கப்பா... இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் ரூ.3.49 லட்சம் கண்டெடுப்பு!

Andhra Pradesh
By Sumathi 3 years ago
Report

ஆந்திராவில், இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் சோதனை செய்தபோது ரூ.3.49 லட்சம் மீட்கப்பட்டது.

காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அடேங்கப்பா... இறந்துபோன பிச்சைக்காரர் வீட்டில் ரூ.3.49 லட்சம் கண்டெடுப்பு! | 349 Lakh At The Home Of Beggar Who Died In Andhra

அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகளும் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தது. அவற்றை எண்ணி பார்த்த போது 3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.

இதையடுத்து முதியவரை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.