கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 320 பேர் கைது - காவல்துறை

Tamil Nadu Police Kallakurichi School Death Kallakurichi
By Thahir Jul 18, 2022 04:00 AM GMT
Report

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 320 பேர் கைது - காவல்துறை | 320 People Have Been Arrested Kallakurichi Riots

பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். பேருந்துகள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது. இதை அடுத்து அங்கு வந்த அதிரடிப்படை போலீசார் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

320 பேர் கைது 

தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 320 பேர் கைது - காவல்துறை | 320 People Have Been Arrested Kallakurichi Riots

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 320 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.