காத்திருந்த அதிர்ச்சி - ஒரே நாளில் 32 கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தொற்று
நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 32 கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுகர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பயிலும் 32 மாணவிகளுக்கு ஒரேநாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் அனைவரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளாவிற்கு சென்று சில தினங்களுக்கு முன் கல்லூரிக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நர்சிங் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கேரள மக்கள் வருகை தருவதால் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.