காதணி விழாவுக்கு சென்ற 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

investigation
By Fathima Aug 20, 2021 04:11 PM GMT
Report

கரூரில் காதணி விழாவிற்கு சென்ற நபர்களில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூரின் குளித்தலை அருகே பொய்யா மணியில் அரவாணி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் தன்னுடைய குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதாக இருந்தார்.

உறவினர்கள் அனைவரும் விழாவுக்கு வருகை தந்திருந்தனர், அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் கூடுகட்டி இருந்த விஷவண்டு பறந்துள்ளது.

இந்த வண்டு கடித்ததில் 7 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 32 பேரை கடித்தது, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.