பெருமழை பாதிப்பு - நெல்லை, தூத்துக்குடியில் 32 பேர் பலி...!!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
மழை பாதிப்பு
கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடமைகள், கால்நடைகள் போன்றவை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.
அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
32 பேர் பலி
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பேரும், வீட்டு சுவர் இடிந்ததால் 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டத்திலும் மழை வெள்ள பாதிப்புக்கு 11 பேரும், மின்சாரம் தாக்கி ஒருவரும் உயிரிழந்தனர். மொத்தமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.