13 வயது சிறுவனுடன் தகாத உறவில் 31 வயது பெண் கர்ப்பம்... - 10 ஆண்டு சிறைத்தண்டனை...?
13 வயது சிறுவனுடன் ரகசிய உறவில் இருந்த 31 வயது பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13 வயது சிறுவனுடன் தகாத உறவில் 31 வயது பெண் கர்ப்பம்
அமெரிக்கா, கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா செர்ரானோ (31). இவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இவர்களுடைய நட்பு நாளடைவில் ரகசிய காதலாக மாறியது.
பல முறை ஆண்ட்ரியா அச்சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டிருக்கிறார். இதனையடுத்து, ஆண்ட்ரியா கர்ப்பிணியாகி கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். 13 வயதில் என் மகன் இப்படி ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டானே என்று கதறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அச்சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார், குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆண்ட்ரியாவை கைது செய்த நிலையில், தற்போது ஆண்ட்ரியாவிற்கு இவ்வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.