தேவாலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு..!
நைஜிரியாவில் தேவாலயத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜிரியாவின் தென்கிழக்கில் உள்ள ரிவர்ஸ் மாகாணத்தில் கிங்ஸ் அசெம்பிளி பெற்தேகோஸ்டல் தேவாலயம் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் ஏழை எளியயோருக்கு இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் காலை 5 மணிக்கே ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். தேவாலயத்தின் சிறிய வாசல் வழியே ஏராளமானோர் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதில் கர்ப்பிணி பெண் ஒருவர்,குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
இதில் காயம் அடைந்த 7 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு தெற்கு நைஜீரியா அனம்ப்ராவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.