ஆஹா... தனுஷின் குரலில் மேகம் கருக்காதா - இத்தன மில்லியனா?
தனுஷின் குரலில் வெளியான மேகம் கருக்காதா பாடல் 30மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் ஒரு feel good படமாக தயாரிக்கப்பட்டது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக தனுஷின் தங்க மகன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை சான் பிக்சர்ஸ் தயாரித்தது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. திருச்சிற்றம்பலமாக தனுஷும், அனுஷ்காவாக ராசி கண்ணாவும், சோபனாவாக நித்யா மேனனும், ரஞ்சனியாக பிரியா பவானியும்,
மேகம் கருக்காதா - 30M
திருச்சிற்றம்பலத்தின் தாத்தாவாக பாரதிராஜாவும், தந்தையும் இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ்ராஜும் நடித்துள்ளனர். முதலில், ‘தாய் கிழவி ‘ என்ற பர்ஸ்ட் சிங்கிளை வெளியானது.
இந்த பாடல் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான 'மேகம் கருக்காதா' பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் கேட்பதற்கே ரம்மியமாக உள்ளது. இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன் படி, தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.