ரூ.3,000 கோடியை சுருட்ட திட்டமிட்ட கெஜ்ரிவால்? - பா.ஜ.க வைக்கும் பரபர குற்றச்சாட்டு

BJP
By Irumporai Nov 07, 2022 07:26 AM GMT
Report

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் அதாவது கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பெறுவதற்காக சுமார் 2 லட்சம் போலி பத்திர பணியாளர்களை பதிவு செய்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது .

ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது இத்திட்டத்தின்கீழ் டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் சுமார் இரண்டு லட்சம் போலி கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ரூ.3,000 கோடியை சுருட்ட திட்டமிட்ட கெஜ்ரிவால்? - பா.ஜ.க வைக்கும் பரபர குற்றச்சாட்டு | 3000 Cr Scam Allegations On Arvind Kejriwal

கட்டுமான தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக போலி பயனர்கள் பதிவு செய்யப்பட்டனர் இதன் மூலம் ரூபாய் 3000 கோடி அளவுக்கு நிதியை சுருட்ட ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டு லட்சம் போலி விவரங்கள்

கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேர் ஒரே தொலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மேலும் 15 ஆயிரத்து 750 பேர் ஒரே ஒரு குடியிருப்பு முகவரியும் 4 ஆயிரத்து 370 பேர் ஒரே நிரந்தர முகவரியும் பதிவு செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர் .

ரூ.3,000 கோடியை சுருட்ட திட்டமிட்ட கெஜ்ரிவால்? - பா.ஜ.க வைக்கும் பரபர குற்றச்சாட்டு | 3000 Cr Scam Allegations On Arvind Kejriwal

2006 முதல் 13 லட்சத்து 13 ஆயிரத்து 3009 பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளனர் இதில் 2018 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை விவரங்கள் 2 லட்சம் விவரங்கள் போலியாக உள்ளதாகும் குற்றம்சாட்டியுள்ளது