300 யூனிட் மின்சாரம் இலவசம் - மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு..!

Smt Nirmala Sitharaman India Budget 2024
By Karthick Feb 01, 2024 07:23 AM GMT
Report

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்

தேர்தலை முன்னிட்டு, இந்தாண்டு மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

300-unit-current-for-houses-nirmala-sitharaman

6-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும்.

300-unit-current-for-houses-nirmala-sitharaman

துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றப்படும்.

ராமர் நிற புடவையில் வந்த நிதியமைச்சர் - புடவைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா..?

ராமர் நிற புடவையில் வந்த நிதியமைச்சர் - புடவைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா..?

300 யூனிட் இலவசம்...

நேரடி மற்றும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.

300-unit-current-for-houses-nirmala-sitharaman

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், அதில் 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும்

300-unit-current-for-houses-nirmala-sitharaman

சூரிய மேற்கூரை வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.