300 ரேசன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை..!

Spring Onion Tomato Government of Tamil Nadu
By Thahir Jul 12, 2023 04:56 AM GMT
Report

இன்று முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்கிறது.

தக்காளி விலை தொடர்ந்து உயர்வு 

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை என்பது தொடர்ந்து ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி தினமும் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தக்காளி விலை உயர்வை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி 

சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதால் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

300 ration shops selling tomatoes from today

காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்து உள்ளது.

தொடர்ந்து காய்கறி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் இதை கட்டுப்படுத்த தக்காளியை ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

300 ration shops selling tomatoes from today

அந்த வகையில் இன்று முதல் 300 ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.