பலியாகும் உயிர்கள் : ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Crime Death
By Irumporai Jan 13, 2023 04:32 AM GMT
Report

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 உயிர் பலி வாங்கும் ரம்மி

ஆன்லைன் ரம்மி காரணமாக பலர் உயிரிழந்த நிலையில் ,ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 30 வயது பாலன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

பலியாகும் உயிர்கள் : ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு | 30 Years Old Youth Dead For Online Rummy

மீண்டும் தற்கொலை

தனது தந்தையின் வங்கி கணக்கில் செலுத்த கொடுத்த ஐம்பதாயிரம் பணத்தை சூதாட்டத்தில் இழந்ததாகவும் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த பாலன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அவரது மறைவு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.