காதலிக்க மறுத்த பெண்; 30 ஆண்டுகளாக துன்புறுத்தியவர் நபர் - கொடூர சம்பவம்!
காதலிக்க மறுத்த பெண்ணை நபர் ஒருவர் 30 ஆண்டுகளாக துன்புறுத்தியுள்ளார்.
காதலிக்க மறுத்த பெண்
கன்னியாகுமரி, தாறாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர்(57). இவர் கட்டிட தொழிலளியாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஸ்டெல்லாபாய் என்பவரது வீட்டிற்குச் சென்ற கிறிஸ்டோபர் அங்கு படுக்கையில் உணவறுந்திக்கொண்டிருந்த ஸ்டெல்லா பாயை அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்டெல்லா பாயை கணவர் கோபால கிருஷ்ணன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீஸார் கிறிஸ்டோபரை கைது செய்து விசாரித்ததில்,
கிறிஸ்டோபர் தனது இளமைக் காலத்தில் ஸ்டெல்லா பாயைக் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஸ்டெல்லாபாயிடம் தனது காதலைத் தெரிவித்து, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
கொடூர பின்னணி
ஆனால் ஸ்டெல்லா பாய் இவரது காதலை நிராகரித்துவிட்டு வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து கிறிஸ்டோபரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஆனால் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஸ்டெல்லா பாயை அடிக்கடி அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த கிறிஸ்டோபர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திள்ளார்.
ஆனால் பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த ஸ்டெல்லா கிறிஸ்டோபரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் கோபாலகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜாண் மீன் சந்தைக்கு சென்ற ஸ்டெல்லா பாயை வழி மறித்து தடுத்து நிறுத்தி வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஸ்டெல்லா பாய்க்கு தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அடுத்த மாதம் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில், சிறைக்கு செல்லும் அச்சத்தில் ஸ்டெல்லாவை மீண்டும் தாக்கியது தெரியவந்துள்ளது.