தலைகீழாக கவிழ்ந்த கார்! 30 வயது நடிகை பரிதாப மரணம்
ராஜஸ்தானை சேர்ந்த நடிகை ஹர்ஷில் காலியா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபல மொடலும், நடிகையுமான ஹர்ஷில் காலியா கடந்த திங்களன்று இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வளைவு ஒன்றில் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது.

வேகமாக மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது, சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள் காரை தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை மீட்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
30 year old actress Harshil kalia accident live cctv footage, harshila kalia news today #harshilkalia #jaipur #shiprapath #shorts #reels pic.twitter.com/pQCvVM195l
— Jagpal Jareda (@jpjaredaa) March 25, 2026