சிறையிலிருந்து விடுவிக்க கோரி பேராட்டம் - மாத்திரை சாப்பிட்டு 30 இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சி
Sri Lanka
By Nandhini
திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
தங்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி 35-வது நாளாக இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இவர்களை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மண்ணெண்ணை ஊற்றி ஒருவர் தீ வைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
