இறுதிச்சடங்கின் போது 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு

Maharashtra
By Fathima Feb 04, 2026 03:47 AM GMT
Report

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச்சடங்கின் போது 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன வழக்கில் ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சரான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கடந்த மாதம் 28ம் தேதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் பலியாகினர்.

அன்னாரின் இறுதிச்சடங்கு மறுநாள் 29ம் தேதி பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடந்தது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச்சடங்கின் போது 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு | 30 Lakh Stolen At Ajit Pawars Funeral

இக்கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், மக்களிடமிருந்து விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் தங்க நகைகளை திருடினர்.

15ம் மேற்பட்டவர்கள் தங்கள் பொருட்கள் திருடு போனதாக பொலிசில் புகார் அளித்தனர், இதனையடுத்து வழக்கு பதிவுசெய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்துள்ளனர்.

9 முறை வென்ற மண்ணிலேயே உயிரிழந்த அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்

9 முறை வென்ற மண்ணிலேயே உயிரிழந்த அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்


அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விரைவில் பொருட்கள் மீட்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கின் போது 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு | 30 Lakh Stolen At Ajit Pawars Funeral