இவ்வளவு பெரிய வாயா.... வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள Gold Fish - வைரலாகும் அபூர்வ புகைப்படம்..!

France Viral Photos
By Nandhini Nov 22, 2022 10:06 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரான்சில் விலையில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட தங்க மீனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வலையில் சிக்கிய 30 கிலோ எடைகொண்ட தங்கமீன்

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், பிரான்ஸ் நாட்டின், ஷாம்பெயின் நகரில் உள்ள புளூவாட்டர் ஏரியில் 30 கிலோ எடையுள்ள ராட்சத தங்கமீனை பிரித்தானிய மீன்பிடி வீரர் ஒருவர் பிடித்துள்ளார்.

அந்த தங்க மீனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்நபர், தங்க மீனை 25 நிமிடங்கள் கையில் வைத்துக்கொண்டு, புகைப்படம் எடுத்த பிறகு அதை மீண்டும் தண்ணீரில் விடுவித்தார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் வாயடைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.    

30-kg-goldfish-in-france