சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. இவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுப்பாராம்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனின் செல்வம், வளர்ச்சி, அழகு போன்றவைக்கு காரணமாக இருக்கிறார். அதனால் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்து விட்டால் அவர்களுக்கு எப்பொழுதும் பணம் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் உள்ளது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலே அழகு சார்ந்த விஷயங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும், இவர்களுக்கு எப்பொழுதும் பணம் தொடர்பாக பெரிய அளவில் பிரச்சனைகள் வருவது இல்லை. அதோடு புத்திசாலியாகவும் செயல்படக்கூடியவர்கள்.
துலாம்:
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் தான். ஆதலால் துலாம் ராசியினர் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டு இருப்பார்கள். அதோடு எளிமையாகவும் அழகாகவும் இருக்கக்கூடியவர்கள். ஆடை வடிவமைப்பு, அழகு சாதன பொருட்கள் மீது இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அந்த துறையில் இவர்கள் மிக பெரிய அளவில் சாதனை செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.
மீனம்:
மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இங்கு சுக்கிர பகவான் உச்சம் பெறுகிறார். அதனால் இவர்களுக்கு கலை ரசனை அதிகம் இருக்கும். எதையும் ரசித்து செயல்படக்கூடியவர்கள். மேலும் இந்த ராசி பிறந்தவர்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்பு உழைப்பால் உயர்ந்து பெரிய அளவு வளர்ச்சி அடையக்கூடியவர்கள்.