கோவில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு
Death
By Thahir
செங்கல்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 இளைஞர்கள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோவில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளத்தில் குளிக்க சென்ற தனியார் கல்லுாரி மாணவர்கள் முகேஷ் (18), உதயகுமார் (19), மற்றும் விஜய் (18) ஆகியார் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.