விபரீத விளையாட்டு...பாம்பை வாயால் கடித்து துப்பிய 3 இளைஞர்கள் கைது
பாம்பை கடித்து துப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாம்பை கடித்து துப்பிய இளைஞர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன் (33), சூர்யா (21) , சந்தோஷ் (21).
இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர்.
பின்னர் அந்த பாம்பை வாயால் கடித்து இரு துண்டுகளாக கடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து வேலுார வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கைது செய்த வனத்துறையினர்
பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் கைது செய்து ஆற்காடு வனச்சரகர் சரவண பாபு தலைமையிலான வனத்துறை போலீசார்
அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.