சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமாக உயிரிழப்பு - அதிர்ச்சி பின்னணி!
சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்கள் உயிரிழப்பு
அமெரிக்கா, மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். மூவரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், 3 பேரும் தங்கியிருந்த அறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
என்ன காரணம்?
இதுகுறித்து தகவலறிந்து விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு, அறையை ஆய்வு செய்தனர். அங்கு மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது இதுதொடர்பான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.