இன்ஸ்டா காதல் .. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17வயது சிறுவன் : சென்னையில் பகீர் சம்பவம்
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாவில் பழக்கம்
சென்னை அயனாவரன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 13 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், அதன் பின்னார் சிறுமியின் செல்போன் எண்ணுக்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போனில் பேசிய ஆண் நபர் சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விட்டு செல்வதாக கூறினார். உடனடியாக அப்பகுதிக்கு சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் அதில் வியாசார் பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
பாலியல் வன்கொடுமை
இருவருக்கும் முதலில் இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனை நம்பி சிறுமி 17 வயது சிறுவன் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவனை கைது செய்த காவல் துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்
இன்ஸ்டா மூலம் பழக்கமான நபரை நம்பி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.