3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் - போக்சோ சட்டம் பாய்ந்தது
3 வயது குழந்தையிடம் 70 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை, கெம்பத்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா (70). இவர் வசிக்கும் அதே பகுதியில் கூலித் தொழிலாளிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
பல நாட்களாக அந்த குழந்தையை நோட்டமிட்டு வந்த நாராயணப்பா, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 3 வயது குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனடியாக குழந்தையின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நாராயணப்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் 3 வயது குழந்தையிடம் இவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.