3 வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய் - பகீர் சம்பவம்

Tamil nadu Attempted Murder Crime
By Sumathi Mar 08, 2023 11:30 AM GMT
Report

தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

3 வயது குழந்தை 

திருவள்ளுர், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (38), லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தையான கிஷோர் (3) வீட்டு படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.

3 வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய் - பகீர் சம்பவம் | 3 Year Old Child Who Was Injured By His Mother

பின்னர் மறுபடியும் கிஷோர் விளையாட்டுத்தனமாக படியில் ஏறி சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தாய் கம்பால் கிஷோரை முதுகில் அடித்துள்ளார்.

பரிதாப பலி

இதனால் குழந்தை கிஷோர் சுய நினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் உடனடியாக குழந்தயை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கிஷோர்.

தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.