தாயை சுட்டு கொன்ற 3 வயது சிறுவன் - விளையாட்டு வினையான பரிதாபம்

america 3yearoldboyaccidentallykillshismother
By Petchi Avudaiappan Mar 18, 2022 09:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் துப்பாக்கியோடு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக தனது தாயையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில சமயங்களில் நாம் விளையாட்டாக செய்யும் ஒரு காரியம் அசம்பாவிதத்தில் முடிவடையும். இதைத்தான் விளையாட்டு வினையாகும் என பழமொழி மூலம் முன்னோர்கள் உணர்த்தியுள்ளார்கள். 

அந்த வகையில் அமெரிக்காவின் சிக்காகோ புறநகர் பகுதியில் கையில் துப்பாக்கியுடன் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை எதிர்பாராதவிதமாக தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் மத்திய மேற்கு நகரின் புறநகர்ப் பகுதியான டோல்டனில் உள்ள ஷாப்பிங் மாலிற்கு குழந்தையை பின் இருக்கையில் அமரவைத்துவிட்டு பெற்றோர்கள் சென்றுள்ளனர். 

ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தை கார் அடைந்த போது தனது தந்தையின் பிஸ்டலை வைத்து விளையாடிய குழந்தை சுட்டதால் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு தாய் டேஜா பென்னட் மீது பாய்ந்து அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பென்னட் சிகாகோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தையிடம் துப்பாக்கியை விளையாட கொடுத்ததன் டேஜா பென்னட் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.