கழிவு நீர் தொட்டியை சுத்தம் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

By Thahir Oct 21, 2022 10:09 AM GMT
Report

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சத்தியம் கிராண்ட் ரெசாட்டில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது.

இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்ற நிலையில், மூன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கவே, மூன்று தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

3 workers killed in gas attack

இவர்களில் நவீன் என்ற தொழிலாளியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிறரின் உடல் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாகவே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.