சென்னை அணியை விட்டு வெளியேறும் டூபிளஸ்சி - சோகத்தில் ரசிகர்கள்

fafduplessis chennaisuperkings ipl2022
By Petchi Avudaiappan Oct 21, 2021 11:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கவீரர் டூபிளஸ்சியை 3 அணிகள் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளது. அதேசமயம் வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலமும் நடக்கவுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்கவீரர் டூபிளஸ்சியை சென்னை அணி விடுவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அந்த அணியில் பல சிறந்த வீரர்கள் இருப்பதால் இவரை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டூபிளிஸ்சியை 2022 ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் தங்களது அணியில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது.அதில் முதலிடத்தில் ஹைதராபாத் அணி உள்ளது. காரணம் 2021 ஐபிஎல் தொடரில்  சிறப்பாக செயல்படாத டேவிட் வார்னரை அந்த அணி புறக்கணித்து விட்டது. மேலும் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் அவரை அந்த அணி நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டூபிளஸ்சியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அணியில் இணைப்பதற்கு வாய்ப்பு அதிகம். 

இரண்டாவதாக 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி சுற்று வரை முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை தழுவியது, என்னதான் அந்த அணியில் வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில்,நித்திஷ் ராணா போன்ற மிகச்சிறந்த உள்ளூர் வீரர்கள் இருந்தாலும், டு பிளசிஸ் போன்று ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மென் இருந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்றாவதாக 2021 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் போன்ற வீரர்களை தவிர மற்ற எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை, இதன் காரணமாகவே 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் பேட்டிங்கில் தவித்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி டூபிளஸ்சி போன்ற ஒரு வீரரை தனது அணியில் இணைப்பதற்கு நிச்சயம் முயற்சி செய்யும் என கூறப்படுகிறது.

You May Like This