3 வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் தேதியை வெளியிட்ட மத்திய அரசு

3 repeal of the agricultural act date notice
By Nandhini Nov 27, 2021 07:46 AM GMT
Report

வரும் நவம்பர் 29ம் தேதி அன்று 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வருடமாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றுகையில், 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் காஷ்யப் கூறுகையில், முன்னுரிமை அடிப்படையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.

மேலும் இது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 29ம் தேதியன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.

மேலும், 3 விவசாயச் சட்டங்கள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பயனும் கிடையாது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றார்.