கஞ்சா வியாபாரிகளுடன் கூட்டு வைத்து கஞ்சா விற்பனை 3 போலீசார் சஸ்பெண்ட்
கஞ்சா வியாபாரிகளுடன் கூட்டு வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா வியாபாரிகளுடன் போலீசாருக்கு தொடர்பு?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவைகளின் விற்பனையை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
மேலும் பள்ளி கல்லூரி மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர் ஏற்படுத்த மாவட்ட எஸ்பி தீபா சக்தி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் சார்பில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஒழிப்பு அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் ஒரு சில போலீசாரு தொடர்பு உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் அவர்களை கண்காணிக்க தொடங்கினார் காவல்துறை அதிகாரிகள். இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் மூன்று போலீசாருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ரமேஷ் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கண்ணன் மற்றும் சோளிங்கர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் வேணுகோபால் என மூன்று போலீசாரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் இதுபோன்று வேறு யாராவது போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர்களிடம் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் எச்சரித்துள்ளார்