காரணமே இல்லாமல் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்ட மூன்று வீரர்கள்..!

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் காரணமே இல்லாமல் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்ட மூன்று வீரர்கள் பற்றி நாம் இதில் காண்போம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது.இளம் வீரர்களை தவிர்த்து ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரஷீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா, குவின்டன் டிகாக் போன்றவர்கள் கழட்டி விடப்பட்டனர்.
அப்படி திறமை இருந்தும் கழட்டி விடப்பட்ட 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம். முதலாவதாக இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ கடந்த 3 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிக சிறந்த முறையில் பங்காற்றி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவரை எந்த அணி தேர்ந்தெடுக்கிறதோ அந்த அணிக்கு நிச்சயம் ஜானி பேர்ஸ்டோ மிகப் பெரும் உதவியாக திகழ்வார் என்பதற்காக வருகிற 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை தனது அணியில் தக்க வைத்துக்கொள்ளும் என்று பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் அதற்கு நேர்மாறாக இஷன் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்து விட்டது. இளம் வீரராக சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி பணியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மூன்றாவதாக உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் ரஷீத் கான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு முன்னணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி தனது அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இருந்தபோதும் இவர் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் தன்னை 16 கோடி கொடுத்து முதன்மை வீரராக தக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்காமல் ஹைதராபாத் அணி இவரை நீக்கிவிட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து நீக்கினாலும் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை தனது அணியில் சேர்ப்பதற்காக அனைத்து அணிகளும் நிச்சயம் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.